கவின் நடித்துள்ள 'ஸ்டார்' படத்தின் புதிய அப்டேட்


கவின் நடித்துள்ள ஸ்டார் படத்தின் புதிய அப்டேட்
x

இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

சென்னை,

'டாடா' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கவின் நாயகனாக நடிக்கும் திரைப்படம் 'ஸ்டார்'. இந்த படத்தை 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கி பிரபலமான இளன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பி.வி.எஸ்.என்.பிரசாத், ஶ்ரீநிதி சாகர் ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பு செய்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்த பாடல் குறித்த அறிவிப்பை கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி 'ஸ்டார் இன் தி மேக்கிங்' என்ற பாடல் இன்று (பிப்ரவரி 16) மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இளன் எழுதியுள்ள இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார்.


Next Story