சந்தானம் நடிக்கும் 'வடக்குப்பட்டி ராமசாமி' படத்தின் புதிய அப்டேட்


சந்தானம் நடிக்கும் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் புதிய அப்டேட்
x

நடிகர் சந்தானம் தற்போது 'வடக்குப்பட்டி ராமசாமி' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சென்னை,

பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் திரைப்படம் 'கிக்'. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. தொடர்ந்து இவர் 'டிக்கிலோனா' படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகியுடன் மீண்டும் கைக்கோர்த்துள்ளார். இந்த படத்திற்கு 'வடக்குப்பட்டி ராமசாமி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். மேலும், இந்த படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தில் 'பேட்ட', 'பூமராங்', 'எனை நோக்கி பாயும் தோட்டா', 'ஒரு பக்க கதை' உள்ளிட்ட படங்களில் நடித்த மேகா ஆகாஷ் சந்தானத்துடன் இணைந்து நடிக்கிறார். இதனை போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.


Next Story