திருச்சிற்றம்பலம் குறித்து மனம் திறந்த நித்யா மேனன்.. இரண்டு ஆண்டுகளை கடந்த திருச்சிற்றம்பலம்


திருச்சிற்றம்பலம் குறித்து மனம் திறந்த நித்யா மேனன்.. இரண்டு ஆண்டுகளை கடந்த திருச்சிற்றம்பலம்
x

நடிகை நித்யா மேனன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிடிஎஸ் காட்சிகளை பகிர்ந்து திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார்.

சென்னை,

மித்ரன் ஆர். ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடித்து கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் திருச்சிற்றம்பலம். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து இருந்தனர். அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தில் தனுஷுடன் இணைந்து பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கன்னா உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் அளவில் இப்படம் வெற்றியடைந்தது.

இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த நடிகை நித்திய மேனனுக்கு சிறந்த கதாநாயகிக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், இப்படத்தில் வரும் மேகம் கருக்காத பாடலுக்கு சிறந்த நடன இயக்குனர் என்கிற தேசிய விருது ஜானி மாஸ்டருக்கு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், இன்றுடன் வெளிவந்து 2 ஆண்டுகள் ஆகியுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இதுகுறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனமும் வீடியோ ஒன்றை வெளியிட்டள்ளனர்.

இந்நிலையில் நடிகை நித்யா மேனன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தில் எடுக்கப்பட்ட பிடிஎஸ் காட்சிகளை பகிர்ந்து அப்படத்தில் நடித்த அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார். அதில் " திருச்சிற்றம்பலம் படத்திற்காக எனது முதல் தேசிய விருது பெற்றதில் மகிழ்ச்சி. பார்ப்பதற்கு எளிமையான தெரியும் நடிப்பிதற்கு பின்னால் இருக்கும் உழைப்பு எளிமையானதல்ல என புரிந்துக்கொண்ட தேசிய விருது தேர்வுக்குழுவிற்கு நன்றி. சிறந்த நடிப்பு என்பது எடை குறைப்போ , அதிகரிப்போ, செயற்கையான உடலை மாற்றிக்கொள்வதிலோ கிடையாது. அது நடிப்பின் ஒரு பகுதிதானே தவிர அதுவே நடிப்பு கிடையாது. இதை நிரூபிக்கவே முயற்சித்து வருகிறேன்.

இந்த விருது பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், தனுஷ், என எங்கள் 4 பேருக்கான விருது. ஏனென்றால் ஒரு படத்தில் நடிகருக்கு இணையாக நடிகைக்கும் முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் நான் இதுவரை நடித்ததில்லை. உண்மையை விட வதந்திகள் அதிகம் பேசப்படும் ஒரு இடத்தில் முன்னேறுவது என்பது மிகவும் கடினம்." என பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story