கர்நாடக அரசு பஸ்களில் 'ஓ.சி.' பயணம்: ரூ.5¾ லட்சம் அபராதம்


கர்நாடக அரசு பஸ்களில் ஓ.சி. பயணம்: ரூ.5¾ லட்சம் அபராதம்
x

கர்நாடக அரசு பஸ்களில் ‘ஓ.சி.’ பயணம்: ரூ.5¾ லட்சம் அபராதம் விதித்து கே.எஸ்.ஆர்.டி.சி. நடவடிக்கை எடுத்துள்ளது.

பெங்களூரு: கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி.) சார்பில் மாநிலத்திற்கு உள்ளும், பிற மாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் கடந்த ஜூன் மாதத்தில் முறைகேடுகளை தடுக்கும் நோக்கத்தில் டிக்கெட் பரிசோதகர்கள் பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களுக்கு சென்று கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்களில் திடீரென பரிசோதனையில் ஈடுபட்டனர்.மொத்தம் 46 ஆயிரத்து 813 பஸ்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் 3 ஆயிரத்து 482 நடத்துனர்கள் டிக்கெட் கட்டண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் 3 ஆயிரத்து 937 பயணிகள் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுக்கு ரூ.5 லட்சத்து 70 ஆயிரத்து 655 அபராதம் விதிக்கப்பட்டது. மோசடி செய்த நடத்துனர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு பஸ்களில் பயணிக்கும் பொதுமக்கள், தவறாமல் டிக்கெட் கேட்டு பெற வேண்டும் என்று கே.எஸ்.ஆர்.டி.சி. வேண்டுகோள் விடுத்துள்ளது.


Related Tags :
Next Story