சன்னி லியோன் நடித்துள்ள 'ஓ மை கோஸ்ட்' படத்தின் டிரைலர் வெளியானது..!


சன்னி லியோன் நடித்துள்ள ஓ மை கோஸ்ட் படத்தின் டிரைலர் வெளியானது..!
x

நடிகை சன்னி லியோன் நடித்துள்ள 'ஓ மை கோஸ்ட்' படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

சென்னை,

நடிகை சன்னி லியோன், தமிழில் தயாராகும் வரலாற்று பின்னணியிலான பேய் படத்தில் நடிக்கிறார். இதில் அவர் நகைச்சுவை பேய் வேடத்தில் வருகிறார். இந்த படத்துக்கு, 'ஓ மை கோஸ்ட்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் யுவன் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் சன்னி லியோனுடன் நகைச்சுவை நடிகர் சதீஷ், 'குக் வித் கோமாளி' புகழ் தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, திலக் ரமேஷ், ஜி.பி. முத்து உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் வீர சக்தி மற்றும் கே சசி குமார் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த படத்துக்கு ஜாவேத் ரியாஸ் இசையமைத்துள்ளார். தீபக் டி.மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் 'ஓ மை கோஸ்ட்' படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story