ஜூனியர் என்.டி.ஆருக்கு ஆஸ்கார் அகாடமி கவுரவம்...!


ஜூனியர் என்.டி.ஆருக்கு ஆஸ்கார் அகாடமி கவுரவம்...!
x

Image Credits : Instagram.com/jrntr

அகாடமி ஆப் மோஷன் பிக்சர்ஸ் அண்ட் ஆர்ட்ஸ் என்ற அமைப்பின் புதிய உறுப்பினர் குழுவில் ஜூனியர் என்.டி.ஆர். இடம்பெற்றுள்ளார்.

சென்னை,

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆர். ராஜமவுலி இயக்கிய 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தில் நடித்ததன் மூலம் உலகப்புகழ் பெற்றார். தற்போது ஜூனியர் என்.டி.ஆருக்கு புதிய கவுரவம் கிடைத்திருக்கிறது.

உலக அளவில் கலைத்துறையில் சேவை செய்தவர்களை கவுரவித்து வரும் ஆஸ்கார் அகாடமியின் சார்பு அமைப்பான அகாடமி ஆப் மோஷன் பிக்சர்ஸ் அண்ட் ஆர்ட்ஸ் என்ற பிரபல அமைப்பு, தனது புதிய உறுப்பினர் குழுவில் ஜூனியர் என்.டி.ஆர். பெயரை இடம்பெறச் செய்துள்ளது.

இதுகுறித்து அகாடமி ஆப் மோஷன் பிக்சர்ஸ் அண்ட் ஆர்ட்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திரைத் துறையில் அர்ப்பணிப்பும், சேவையும் செய்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் கலைஞர்களை இதுபோல தேர்வு செய்து கவுரவிப்பது எங்களுக்கு பெருமை" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஜூனியர் என்.டி.ஆருக்கு கிடைத்திருக்கும் இந்த புதிய கவுரவம் அவரது ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. ஜூனியர் என்.டி.ஆர். தற்போது கொரட்டால சிவா இயக்கும் 'தேவரா' படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்கிறார். சயீப் அலிகான் வில்லனாக நடிக்கிறார்.

இதனைத் தொடர்ந்து பிரசாந்த் நீல் இயக்கும் புதிய படத்தில் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்க உள்ளார்.

1 More update

Next Story