என் வளர்ச்சியில் பெண்கள் - நடிகர் சூர்யா


என் வளர்ச்சியில் பெண்கள் - நடிகர் சூர்யா
x

எங்களுக்கு பின்னால் பெரிய பலமாக எங்கள் வீட்டு பெண்கள் உள்ளனர் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

கார்த்தியை வைத்து விருமன் படத்தை தயாரித்துள்ள நடிகர் சூர்யா படக்குழுவினருக்கு விருந்து கொடுத்தார். நிகழ்ச்சியில் சூர்யா பேசும்போது, ''தனியாக இருந்தால் ஜெயிக்க முடியாது. குடும்பங்களின் தியாகம், விட்டுக்கொடுக்கும் தன்மை, அவர்கள் சுமக்கும் அத்தனை பாரமும்தான் செய்யக்கூடிய தொழிலைத் தொடர்ந்து செய்ய காரணமாக அமைகிறது. அவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. எங்களுக்கு பின் பெரிய பலம் உள்ளது. எங்களை கை தூக்கி விடவும், எங்களை மேலே தூக்கி விடவும் காரணமாக இருப்பது எங்கள் குடும்பத்து பெண்கள் தான். என் அம்மா, மனைவி, என் மகள் ஆகியோர் எவ்வளவு தியாகம் செய்கிறார்கள் என்று தெரியும்.

ஒரு ஆண் ஜெயிப்பது சுலபம். அதுவே ஒரு பெண் ஜெயிக்க 10 மடங்கு சிரமப்பட வேண்டும். பெண்கள் நிறைய விஷயங்களை தியாகம் செய்கிறார்கள். தன் வீட்டிலுள்ள மகனை முன் நிறுத்திவிட்டு அவர்கள் பின்தங்குகிறார்கள். இது போன்று நிறைய சொல்லிக்கொண்டே இருக்கலாம். பெண்கள் நிறைய சிரமங்களை கடந்து வருகின்றனர். அதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களை முன்னிறுத்தி அழகு பார்க்க வேண்டும்" என்றார்.

1 More update

Next Story