மகளின் ஷூதான் அதிர்ஷ்டம்... பாகிஸ்தான் பாடகர் நெகிழ்ச்சி


மகளின் ஷூதான் அதிர்ஷ்டம்... பாகிஸ்தான் பாடகர் நெகிழ்ச்சி
x

தன் செல்ல மகளின் ஷூ எப்போதும் தனக்கு அதிர்ஷ்டம் தருவதாக பிரபல பாடகர் அதிப் அஸ்லாம் நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார்.

மகளின் முதல் பிறந்தநாளையொட்டி குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் முதன் முறையாக ரசிகர்களுடன் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு இவருக்கும் சாரா என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்த ஜோடிக்கு ஏற்கனவே இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

பாடல்கள் தவிர்த்து திரைப்படங்கள், நாடகங்களிலும் நடித்துள்ள இவர் இந்தியா, பாகிஸ்தான் தாண்டி ஹாலிவுட்டிலும் தடம்படித்து தன் தனித்துவமான குரலுக்கென உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார்.

அப்பாக்களுக்கு மகள் எப்போதுமே இளவரசிதான். தனது மகள் குட்டி ஷூ தனக்கு எப்போதுமே அதிர்ஷடமானது என பிரபல பாகிஸ்தான் பாடகரும், நடிகருமான அதிப் அஸ்லாம் நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார். தனது செல்ல மகளின் முதல் பிறந்தநாளன்று இந்தப் புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, 'அப்பா உன்னுடைய ஷூவை எப்போதும் என் பாக்கெட்டிலேயே வைத்துக் கொள்வேன். ஏனெனில், அது எனக்கு எப்போதுமே அதிர்ஷ்டம் தரக்கூடியது' எனக் கூறியுள்ளார்.

அவர் பகிர்ந்துள்ள இந்த நெகிழ்ச்சித் தகவல் அவரது ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்து, அவரது இன்ஸ்டாவில் இதயங்களை அள்ளி வருகிறது.

1 More update

Next Story