ஷாருக்கானின் பதான் எப்படி உள்ளது...? வெளியான டுவிட்டர் விமர்சனம்


ஷாருக்கானின் பதான் எப்படி உள்ளது...? வெளியான டுவிட்டர் விமர்சனம்
x
தினத்தந்தி 25 Jan 2023 5:58 AM GMT (Updated: 25 Jan 2023 6:23 AM GMT)

பதான் ஒரு சிறந்த ஆக்ஷன் திரில்லர் படமாக இருப்பதாகவும், ஷாருக்கான், தீபிகா படுகோன் கெமிஸ்ட்ரி நன்றாக இருப்பதாகவும் ஜான் அப்ரஹாமின் நடிப்பு அபாரமாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

சென்னை

நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு, பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் பதான் இன்று வெளியாக உள்ளது. 100க்கும் மேற்பட்ட நாடுகளில் 2500 க்கும் மேற்பட்ட திரை அரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகி உள்ளது.

இங்கிலாந்து சென்சார் போர்டில் இருந்து ஏற்கனவே படத்தில் நிறைய வன்முறை மற்றும் ஆபாச ஜோக்குகள் உள்ளன என கூறப்பட்டது.

இந்த நிலையில் படத்தை பற்றிய ரசிகர்கள் தங்கள் கருத்த டுவிட்டர் மூலம் வெளியிட்டு உள்ளனர். பதான் ஒரு சிறந்த ஆக்ஷன் திரில்லர் படமாக இருப்பதாகவும், ஷாருக்கான், தீபிகா படுகோன் கெமிஸ்ட்ரி நன்றாக இருப்பதாகவும் ஜான் அப்ரஹாமின் நடிப்பு அபாரமாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

குறிப்பாக சல்மான் கானின் 10 நிமிட சிறப்பு தோற்றம் படத்தின் ஹைலைட்டான விஷயமாக அமைந்துள்ளதாம். ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை சீட்டின் நுனியில் அமரவைப்பதாகவும் விமர்சனங்கள் வருகின்றன.பாடல்களுடன் ஒட்டுமொத்த கதைக்களமும் நன்றாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆக்ஷன் கலந்த படமான பதானில் நகைச்சுவை கதாபாத்திரங்களும் சில திருப்பங்களும் ஈர்க்கும்.

என்னதான் ஆங்காங்கே சில குறைகள் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக இப்படம் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்பதே ரசிகர்களின் கருத்தாக இருக்கின்றது. எனவே பதான் படத்தின் மூலம் ஷாருக்கான் மட்டுமல்லாமல் பாலிவுட் திரையுலகமே வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக சல்மான் கானின் கேமியோ படத்தின் ஹைலைட்டான விஷயமாக அமைந்துள்ளதாம். ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை சீட்டின் நுனியில் அமரவைப்பதாகவும் விமர்சனங்கள் வருகின்றன.

கதையை பழைய காலாவதியான கதை என்று மற்றொரு நெட்டிசன்கூறி உள்ளார். ஷாருக்கானிடம் இருந்து பார்வையாளர்கள் விரும்பிய பொழுதுபோக்கும் நகைச்சுவையும் காணாமல் போய்விட்டதாகவும், மற்றொரு தோல்வி நிகழும் என்றும் நெட்டிசன் கூறினார்.

சில நெட்டிசன்கள் விஎப்எக்ஸ் மிகவும் மோசமாக இருப்பதாக கருத்து தெரிவிக்கின்றனர். தீவிரவாதியாக நடித்த ஜான் ஆபிரகாம் (அன்சாரி) மற்றும் தீபிகா (திஷா) ஆகியோர் கதாபாத்திரங்கள் கார்ட்டூன் கதாபாத்திரங்களை போன்று இருப்பதாக கருத்து தெரிவித்து உள்ளனர்.

வர்த்தக நிபுணர் சுமித் கதல் இந்த படத்திற்கு 4.5 ரேட்டிங் கொடுத்துள்ளார்.


Next Story