ரூ.900 கோடி...! ஷாருக்கானின் 'பதான்' வசூலில் சாதனை


ரூ.900 கோடி...!  ஷாருக்கானின் பதான் வசூலில் சாதனை
x

உலக அளவில் படம் ரூ.901 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படம் கடந்த 25-ஆம் தேதி இந்தியா முழுவதிலும் 8000 திரையரங்குகளில் வெளியானது. பல எதிர்ப்புகளை தாண்டி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், 'பதான்' படத்தின் வசூல் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, தற்போது, படம் வெளியாகி 17 நாட்கள் ஆன நிலையில், உலக அளவில் படம் ரூ.901 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் படம் ரூ.464 கோடியை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது


Related Tags :
Next Story