வசூல் வேட்டையில் புதிய சாதனை படைத்த 'பதான்'


வசூல் வேட்டையில் புதிய சாதனை படைத்த பதான்
x

ற்போது இந்த திரைபடம் உலகளவில் இதுவரை ரூ.780 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த 25-ஆம் தேதி இந்தியா முழுவதிலும் 8000 திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில், தற்போது இந்த திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ.780 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் 'பதான்' ரூ.481கோடியை வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story