'பத்து தல' படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது; உற்சாகத்தில் சிம்பு ரசிகர்கள்


பத்து தல படத்தின் டிக்கெட் முன்பதிவு  தொடங்கியது; உற்சாகத்தில் சிம்பு ரசிகர்கள்
x

இதனை தயாரிப்பு நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் 'பத்து தல'. இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இப்படம் வருகிற 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதைத் தொடர்ந்து படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், 'பத்து தல' படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதனால் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


Next Story