தலைமுடி நரைத்த நிலையில் வெளியான புகைப்படம்- ஜாக்கி சான் விளக்கம்


தலைமுடி நரைத்த நிலையில் வெளியான புகைப்படம்- ஜாக்கி சான் விளக்கம்
x

தலைமுடி நரைத்த நிலையில் வெளியான புகைப்படம் குறித்து ஜாக்கி சான் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

'90ஸ் கிட்ஸ்களின் நாயகனாக திகழ்பவர் நடிகர் ஜாக்கி சான். இவரின் தி லெஜெண்ட் ஆப் டிரங்கன் மாஸ்டர், போலீஸ் ஸ்டோரி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர். அவரின் அசாத்திய சண்டை காட்சிகளுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

இதனிடையே, நடிகர் ஜாக்கி சான் தற்போது திரைப்படங்களில் நடிப்பதை பெருமளவு குறைத்துவிட்டார். ஜாக்கி சான் கடைசியாக நடித்து 2023ம் ஆண்டு வெளியான திரைப்படம் ரைட் ஆன். இந்த படத்திற்குபின் ஜாக்கி சான் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை.

சமீபத்தில் நடிகர் ஜாக்கி சானின் புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலானது. தலைமுடி நரைத்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் ஜாக்கி சான் பங்கேற்றது தொடர்பான புகைப்படம் வைரலாகினது. இந்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்து '90ஸ் கிட்ஸ்களின் நாயகன்' ஜாக்கி சானுக்கும் வயது ஆகிவிட்டது என கருத்துகளை தெரிவித்தனர்.

இந்நிலையில் நடிகர் ஜாக்கி சான் கடந்த 7-ம் தேதி தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்த நாளையடுத்து ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என பல்வேறு தரப்பினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் ஜாக்கி சான் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது, தலைமுடி நரைத்த நிலையில் வெளியான புகைப்படம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,

தலைமுடி நரைத்த நிலையில் என்னுடைய புகைப்படம் ஒன்றை இணையத்தில் பார்த்து பலரும் எனது உடல்நிலை குறித்து கவலை தெரிவித்து வருகிறார்கள். யாரும் கவலைப்பட வேண்டாம். அது என்னுடைய அடுத்த படத்திற்கான கெட்-அப். 70 வயதில் நரை முடி வளர்வது இயற்கை. இவ்வாறு கூறினார்.


Next Story