விறுவிறுப்பான படப்பிடிப்பில் முன்னணி நடிகர்களின் படங்கள்


விறுவிறுப்பான படப்பிடிப்பில் முன்னணி நடிகர்களின் படங்கள்
x

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்கள் பலரும் ஒரு படத்தை முடித்த பிறகே அடுத்த படத்தில் நடிக்கப் போவது என்ற கொள்கை வைத்துள்ளனர். அதன்படி அவர்கள் தற்போது நடிக்கும் படங்கள் மற்றும் அடுத்து நடிக்க இருக்கும் புதிய படங்கள் பற்றிய விவரங்கள்:-

ரஜினிகாந்த் `ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு 60 சதவீதத்துக்கு மேல் முடிந்துள்ளது. சென்னையில் ஜெயில் அரங்கு அமைத்து படப் பிடிப்பை நடத்தி வருகிறார்கள். இறுதிகாட்சிகளை எடுக்க ஐதராபாத் செல்லும் திட்டம் உள்ளது. இந்தப் படத்தை முடித்து விட்டு, மகள் ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் கவுரவ தோற்றத்தில் நடிக்க இருக்கிறார்.

கமல்ஹாசன் `விக்ரம்' படத்துக்கு பிறகு ஏற்கனவே பாதியில் நின்றுபோன `இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்திலும் அடுத்து நடிக்க உள்ளார். உதயநிதி நடிக்கும் படமொன்றை தயாரிக்கவும் இருக்கிறார்.

வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடிக்கும் `வாரிசு' பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இது வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தை முடித்து விட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே `மாஸ்டர்' படம் வந்துள்ளது.

அஜித்குமார் வினோத் இயக்கும் `துணிவு' படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து தொழில் நுட்ப பணிகள் நடக்கின்றன. பொங்கலுக்கு திரைக்கு கொண்டு வருகிறார்கள். அடுத்து விக்னேஷ்சிவன் இயக்கத் தில் நடிக்கிறார்.

பா.ரஞ்சித் இயக்கும் `தங்கலான்' படத்தில் விக்ரம் நடிக்கிறார். இது கோலார் தங்க வயல் பின்னணி கதையம்சம் கொண்ட படமாக தயாராகிறது.

சூர்யா இயக்குனர் பாலா இயக்கும் `வணங்கான்' படத்தில் நடித்து வந்தார். இப்போது சிவா இயக்கும் படத்திலும் நடிக்கிறார். ‌ வாடிவாசல் படமும் உள்ளது.

கார்த்தி `பொன்னியின் செல்வன்', `சர்தார்' படங்களுக்கு பிறகு ராஜு முருகன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இது கார்த்தியின் 25 வது படம். `ஜப்பான்' என்று பெயர் வைத்துள்ளனர். அடுத்து சர்தார் 2-ம் பாகத்திலும் நடிக்கிறார்.

வினோத் குமார் இயக்கும் `லத்தி' படத்தில் விஷால் நடித்து முடித்துவிட்டு, ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கத்திலும் நடிக்கிறார். ஜெயம் ரவி அடுத்து ஆண்டனி பாக்யராஜ் இயக்கும் `சைரன்' படத்தில் நடித்து வருகிறார். தனுஷ், தமிழ், தெலுங்கில் தயாராகும் `வாத்தி' படத்தை முடித்து விட்டு இப்போது அருண் மாதேஸ்வரன் இயக்கும் `கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் `மண்டேலா' படத்தை இயக்கி பிரபலமான மடோன் அஸ்வின் இயக்கத்தில் `மாவீரன்' படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்தப் படங்களின் படப்பிடிப்புகள் பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.


Next Story