நடிகருடன் ஊர்சுற்றும் நடிகை பூஜா ஹெக்டே - வீடியோ வைரல்


நடிகருடன் ஊர்சுற்றும் நடிகை பூஜா ஹெக்டே - வீடியோ வைரல்
x
தினத்தந்தி 1 April 2024 8:22 AM GMT (Updated: 1 April 2024 8:23 AM GMT)

பூஜா ஹெக்டே பாலிவுட் நடிகர் ரோகன் மெஹ்ராவை காதலித்து வருவதாக வதந்தி பரப்பப்பட்டது

மும்பை

தமிழில் 'முகமூடி' படத்தில் அறிமுகமான பூஜா ஹெக்டே 'பீஸ்ட்' படத்தில் விஜய் ஜோடியாக நடித்து பிரபலமானார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் சமீபத்தில் நடித்த படங்கள் தோல்வியைத் தழுவி வரும் நிலையில் சினிமாவில் இருந்து சிறிது விலகி இருந்தார்.

சமீபத்தில், பூஜா ஹெக்டே பாலிவுட் நடிகர் ரோகன் மெஹ்ராவை காதலித்து வருவதாக வதந்தி பரப்பப்பட்டது. இந்நிலையில் மும்பையில், பாலிவுட் நடிகர் ரோகன் மெஹ்ராவுடன் காரில் ஊர் சுற்றியுள்ளார். பின்னர் இருவரும் பின் பக்க சீட்டில் அமர்ந்து பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

இதனை கண்ட ரசிகர்கள் இவர்கள் காதலித்து வருவதாக வெளியான தகவல் உண்மைதானா? என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர். பூஜா ஹெக்டே தற்போது 'தேவா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தி படத்தில் நடித்து வருகிறார்.


Next Story