12 ஆண்டுகளுக்கு பிறகு காதலரை பிரிந்தார் பிரபல பாப் பாடகி ஷகிரா..!


12 ஆண்டுகளுக்கு பிறகு காதலரை பிரிந்தார்  பிரபல பாப் பாடகி ஷகிரா..!
x

12 ஆண்டுகளுக்கு ஷகிரா - ஜெரார்டு பிக் இருவரும் பிரிவதாக அறிவித்துள்ளனர்

பாப் உலகில் பிரபல பாடகியாக இருந்து வருபவர் ஷகிரா (வயது 45). இவரது காதலர் ஜெரார்டு பிக் (வயது 35). கடந்த 2010ம் ஆண்டு நடந்த கால்பந்து உலக கோப்பை போட்டியின்போது இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டனர். இதன்பின்பு இவர்களது காதல் தீவிரம் அடைந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். எனினும், இதுவரை அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

இந்த தம்பதிக்கு இடையே நன்றாக சென்று கொண்டிருந்த பந்தத்தில் விரிசல் ஏற்பட தொடங்கியுள்ளது என கூறப்படுகிறது. அதற்கேற்ப, பாடகி ஷகிராவுடன் ஒன்றாக வீட்டில் வசிக்காமல் பார்சிலோனாவில் தனியாக சென்று பிக் வசித்து வந்துள்ளார்.

இவர்கள் இருவரும் பிரிய உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.இந்த நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகுஷகிரா - ஜெரார்டு பிக் இருவரும் பிரிவதாக அறிவித்துள்ளனர்.

நாங்கள் பிரிகிறோம் என்பதை உறுதிபடுத்துகிறோம் . எங்கள் குழந்தைகளின் நல்வாழ்வுக்காக, நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம், எங்கள் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று அவர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.


Next Story