குளியலறை தொட்டியில் அரை நிர்வாண கோலத்தில் பிரணிதா: ரசிகர்கள் எதிர்ப்பு


குளியலறை தொட்டியில் அரை நிர்வாண கோலத்தில் பிரணிதா: ரசிகர்கள் எதிர்ப்பு
x

நடிகை பிரணிதா நீண்ட நாட்கள் சினிமாவில் இருந்து ஓய்வு எடுத்துவிட்டு இப்போது மீண்டும் நடிக்க வந்து உள்ளார்.

சென்னை,

தமிழில் 'உதயன், சகுனி, மாஸ், எனக்கு வாய்த்த அடிமைகள்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரணிதா, தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். பிரணிதா திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயாகி நீண்ட நாட்கள் சினிமாவில் இருந்து ஓய்வு எடுத்துவிட்டு இப்போது மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். சமூக வலைத்தளத்திலும் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் பிரணிதா புதிதாக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ சர்ச்சையை கிளப்பி உள்ளது. அந்த வீடியோவில் பிரணிதா குளியலறை தொட்டியில் இருக்கிறார். அரை நிர்வாண கோலத்தில் தனது உடலை சோப்பு நுரைகளால் மறைத்து காட்சி அளிக்கிறார். ஜாலியாக பகிர்ந்த இந்த வீடியோவால் பிரணிதா எதிர்ப்புக்கு உள்ளாகி இருக்கிறார்.

வலைத்தளத்தில் ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்தும், அவதூறு செய்தும் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். அளவுக்கு மீறிய சேட்டைகளை நிறுத்துங்கள். இந்த வீடியோவை நீக்குங்கள் என்றெல்லாம் கருத்து பதிவிட்டுள்ளனர். இது பரபரப்பாகி உள்ளது.


Next Story
  • chat