'பிரேமலு'- ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு


பிரேமலு- ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
x

'பிரேமலு' திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

கடந்த பிப்ரவரி மாதம் 9-ம் தேதி மலையாளத்தில் கிரிஷ் இயக்கத்தில் விஷ்ணு விஜய் இசையில் வெளியான திரைப்படம் 'பிரேமலு'. இந்த படத்தில் மமிதா பைஜூ, நஸ்லேன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ரூ.3 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

அதிக வசூல் செய்யப்பட்ட மலையாள சினிமா வரிசையில் இந்த படமும் இடம்பெற்றுள்ளது. சமீபத்தில் 'பிரேமலு' திரைப்படம் தமிழிலும் வெளியானது.

இந்நிலையில் 'பிரேமலு' படம் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங்கிற்கு தயாராக உள்ளது. பிரபல ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் பிரேமலுவின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை பெற்றுள்ளது. அதன்படி இத்திரைப்படம் வருகிற 12-ம் தேதி முதல் ஓடிடி-யில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 'பிரேமலு' திரைப்படம் கடந்த 29-ந் தேதி ஓடிடி-யில் வெளியாகும் என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story