'பிரேமலு' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு


பிரேமலு படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
x

'பிரேமலு' திரைப்படம் இன்று தமிழில் வெளியானது.

சென்னை,

கடந்த மாதம் 9-ம் தேதி மலையாளத்தில் கிரிஷ் இயக்கத்தில் விஷ்ணு விஜய் இசையில் வெளியான திரைப்படம் 'பிரேமலு'. இந்த படத்தில் மமிதா பைஜூ, நஸ்லேன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ரூ.3 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

அதிக வசூல் செய்யப்பட்ட மலையாள சினிமா வரிசையில் இந்த படம் இடம்பெற்றுள்ளது. சமீபத்தில் தெலுங்கிலும் 'பிரேமலு' படம் வெளியானது. சமீபத்தில், இந்த படத்தின் தமிழ் டிரைலரை படக்குழு வெளியிட்டது. தற்போது 'பிரேமலு' திரைப்படம் இன்று தமிழிலும் வெளியானது.

இந்நிலையில் 'பிரேமலு' படம் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங்கிற்கு தயாராக உள்ளது. பிரபல ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் பிரேமலுவின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை பெற்றுள்ளது. வருகிற 29-ந் தேதி முதல் ஓடிடி-யில் இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story