உலக அழகி போட்டியில் மோசடி! பிரியங்கா சோப்ரா பட்டம் வென்றது குறித்து சக போட்டியாளர் பரபரப்பு குற்றச்சாட்டு!


உலக அழகி போட்டியில் மோசடி! பிரியங்கா சோப்ரா பட்டம் வென்றது குறித்து சக போட்டியாளர் பரபரப்பு குற்றச்சாட்டு!
x

பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டம் வென்றது குறித்து இப்போது சர்ச்சை வெடித்துள்ளது.

வாஷிங்டன்,

இந்தியாவை சேர்ந்த பிரியங்கா சோப்ரா 2000ம் ஆண்டில் நடந்த உலக அழகி போட்டியில், உலக அழகியாக தேர்வாகி பட்டம் சூடினார். இந்நிலையில், பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டம் வென்றது குறித்து இப்போது சர்ச்சை வெடித்துள்ளது.

உலக அழகி போட்டியில் மோசடி நடந்ததாக 'மிஸ் பார்படாஸ்' அழகி போட்டியில் பட்டம் வென்ற லீலானி மெக்கோனி திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.உலக அழகி போட்டியில் 'தில்லுமுல்லு' நடைபெற்றதால் தான் பிரியங்கா சோப்ராவால் வெற்றி பெற முந்ததாக லீலானி மெக்கோனி கூறினார்.

அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற முன்னாள் உலக அழகிகளுக்கான போட்டியில், மோசடி நடந்ததாக கூறப்படும் நிலையில், இந்த போட்டியில் யார் வெற்றியாளர் என்பது ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது என்று பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார் முன்னாள் மிஸ் பார்படாஸ் லீலானி மெக்கோனி.

முன்னாள் உலக அழகிகளுக்கான இந்த போட்டியில், மிஸ் டெக்சாஸ் பட்டம் வென்ற அழகி ஆர்'போனி கேப்ரியல் வெற்றி பெற்றார். இந்த போட்டியில், ஸ்பான்சர்கள் மற்றும் நிகழ்ச்சி அமைப்பாளர்களின் தற்சார்பு நடவடிக்கை காரணமாகவே, ஆர்'போனி கேப்ரியல் நியாயமற்ற முறையில் வென்றார் என்று லீலானி மெக்கோனி கூறினார்.

மேலும், பிரியங்கா சோப்ரா மீதும் முன்னாள் மிஸ் பார்படாஸ் லீலானி மெக்கோனி சில திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். அதேபோல, உலக அழகி போட்டியில், பிரியங்கா சோப்ராவிற்கு ஆதரவாக இந்திய டிவி அமைப்புகள் சில எடுத்த நடுநிலை தவறிய சார்பு நடவடிக்கையால் அவர் பட்டம் வென்றார் என்று பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.

2000ம் ஆண்டில் நடந்த உலக அழகி போட்டியை நடத்தும் ஸ்பான்சர் நிறுவனமாக இந்தியாவை சார்ந்த ஒரு தொலைக்காட்சி நிறுவனம் இருந்ததால் தான் பிரியங்கா சோப்ராவால் வெற்றி பெற முடிந்தது. உலக அழகி போட்டியில், பிகினி ஆடை சுற்றில் பிரியங்கா சோப்ராவிற்கு ஆதரவாக போட்டியை நடத்தும் நடுவர்கள் விதிகளை மீறியுள்ளனர் என்று லீலானி மெக்கோனி கூறினார். இதுபோன்ற பல சம்பவங்களை அவர் கூறியுள்ளார்.

இறுதியில், உலக அழகி போட்டியில் பிரியங்கா சோப்ரா தான் வெற்றி பெறுவார் என்பது அனைவரும் அறிந்த ஒரு வெளிப்படையான விஷயமாக இருந்தது. உலக அழகி போட்டியில் முறைகேடு நடந்தது என்று லீலானி மெக்கோனி கூறினார்.

அத்துடன் இதுகுறித்து அவர் வீடியோ வெளியிட்டு அதிர்ச்சியை கிளப்பியுள்ளார்.


இந்நிலையில், அவர் பதிவிட்ட இந்த வீடியோவிற்கு ஆதரவாக பல முன்னாள் அழகிகள் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.அவர் அப்போதே இதை பற்றி கூறியிருக்கலாம், ஆனால் 22 ஆண்டுகள் தாமதமாக அவர் வீடியோ வெளியிட்டுள்ளார் என்று சிலர் கூறியுள்ளனர்.

இந்த வீடியோவிற்கு ஆதரவாக ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில், "உலக அழகி பட்டம் வென்ற பிறகு கேட்ட கேள்விக்கு பிரியங்கா சோப்ரா தவறாக பதிலளித்து சர்ச்சையை கிளப்பினார். அவரிடம் 'இன்று வாழும் மிக வெற்றிகரமான நபராக யாரை நீங்கள் நினைக்கிறீர்கள்?' என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த பிரியங்கா சோப்ரா, 'அன்னை தெரசா' என்றார். ஆனால், அன்னை தெரசா மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே(1997இல்) காலமானார் என்பதை அறியாமல் அவர் தவறாக பதிலளித்தார்" என்று இந்த வீடியோவிற்கு ஆதரவாக ஒருவர் பதிவிட்டுள்ளார்.

இதன் காரணமாக, பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டம் வென்றது குறித்து இப்போது சர்ச்சை வெடித்துள்ளது.


Next Story