தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் நிறைவு: 1107 வாக்குகள் பதிவு


தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் நிறைவு: 1107 வாக்குகள் பதிவு
x

சென்னையில் நடந்த திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது.

சென்னை,

தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு சங்கங்களில் முக்கியமானதாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் உள்ளது. இந்த சங்கத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் இன்று நடைபெற்று வந்தது.

இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. மொத்தம் உள்ள 1,406 வாக்குகளில் 1,107வாக்குகள் பதிவாகியுள்ளன. நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை முதல் தொடங்கிய தேர்தலில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் என பலரும் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர்.

இந்தத் தேர்தல் மூலம் தலைவர், 2 துணைத் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர் மற்றும் 26 செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


Next Story