பி.டி சார் திரைப்படம் வெற்றி… தயாரிப்பாளருக்கு மாலை அணிவித்து மரியாதை


பி.டி சார் திரைப்படம் வெற்றி… தயாரிப்பாளருக்கு மாலை அணிவித்து மரியாதை
x

பி.டி சார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளருக்கு இயக்குநர் கார்த்திக் வேணுகோபால், மற்றும் நடிகர் ஹிப்ஹாப் ஆதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சென்னை,

கடந்த 2017-ம் ஆண்டு 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் மூலம் ஒரே சமயத்தில் இயக்குனர் மற்றும் நடிகராக அறிமுகமானார் ஹிப் ஹாப் ஆதி. ஆல்பம் பாடல்களைத் தொடர்ந்து, சினிமாவுக்கு வந்த ஹிப்ஹாப் ஆதி பல படங்களுக்கு இசை அமைப்பாளராக பணியாற்றி இருக்கிறார். சுந்தர் சி இயக்கிய அரண்மனை உள்பட பெரும்பாலான படங்களுக்கு அவர் இசை அமைத்துள்ளார்.

அதையடுத்து நட்பே துணை, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதையடுத்து இறுதியாக அவரது நடிப்பில் வீரன் திரைப்படம் வெளியானது. தற்போது ஆதி நடித்துள்ள திரைப்படம் பி.டி சார். கார்த்திக் வேனுகோபாலன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். பாக்யராஜ், பிரபு, பாண்டியராஜ் உள்பட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேசனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இத்திரைப்படம் கடந்த மே 24-ம் தேதி திரையரங்குகளில் வௌியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறது. இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்க்கு இயக்குநர் கார்த்திக் வேணுகோபால், மற்றும் நடிகர் ஹிப்ஹாப் ஆதி மாலை அணிவித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.


Next Story