தேனிலவு புகைப்படங்களை வெளியிட்ட ரகுல் பிரீத் சிங் - சமூக வலைதளங்களில் வைரல்


புகைப்படங்களை வெளியிட்ட ரகுல் பிரீத் சிங்
x

பிகினி உடையில் ரகுல் பிரீத் சிங் நின்றபடி எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சென்னை,

தமிழில் நடிகர் கார்த்தி ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதை தொடர்ந்து தேவ், என்ஜிகே படங்களில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயனுடன் அயலான் என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் ரகுல் பிரீத் சிங். தொடர்ந்து இந்தியன் 2 படத்தில் கமலுடன் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்துவரும் ரகுல் பிரீத் சிங் கடந்த பிப்ரவரி மாதம் 21-ந் தேதி பிரபல தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானியை காதலித்து திருமணம் செய்தார்.

திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் நடித்துக் கொண்டே இருக்கும் ரகுல் பிரீத் சிங் ஐதராபாத்தில் சொந்தமாக ஓட்டல்

தொழிலும் செய்து வருகிறார். இந்நிலையில் ஜாக்கி பக்னானியும் ரகுல் பிரீத் சிங்கும் திருமணமாகி 4 மாதங்களுக்கு பிறகு தேனிலவு சென்றுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ரகுல் பிரீத் சிங் வெளியிட்டுள்ளார்.

கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள பாலத்தில் பிகினி உடையில் ரகுல் பிரீத் சிங் நின்றபடி எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஏற்கனவே இருவரும் திருமணத்துக்கு முன்பு டேட்டிங் சென்ற படங்களை இருவரும் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story