ராம் சரண் படத்தின் புதிய அப்டேட்


ராம் சரண் படத்தின் புதிய அப்டேட்
x

இந்த படத்தை புச்சி பாபு இயக்குகிறார். ஆர்.சி. 16 படத்திற்கான புதிய அப்டேட் வெளியானது.

தெலுங்கு நடிகர் ராம் சரண் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் "கேம் சேஞ்சர்" படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கியாரா அத்வானி ராம் சரணுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தை தொடர்ந்து அவர் நடிக்கும் படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்காலிகமாக ஆர்.சி. 16 என தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படத்தை புச்சி பாபு இயக்குகிறார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றன.

இந்த நிலையில், ஆர்.சி. 16 படத்திற்கான புதிய அப்டேட்-ஐ படக்குழு வெளியிட்டு உள்ளது. அதன்படி ராம் சரண் நடிப்பில் உருவாகும் 16-வது படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.


Next Story