கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ரா தம்பதியினருக்கு ராம்சரண் படக்குழு வாழ்த்து


கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ரா தம்பதியினருக்கு ராம்சரண் படக்குழு வாழ்த்து
x

கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ரா தம்பதியினருக்கு ராம்சரண் படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்தி திரைத்துறையின் பிரபல நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா நடிகை கியாரா அத்வானி இருவரும் இணைந்து 2021-ம் ஆண்டு 'ஷேர்ஷா' படத்தில் நடித்துள்ளனர். அப்போது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. நடிகை கியாரா அத்வானி 'எம்.எஸ். தோனி தி அண்டோல்டு ஸ்டோரி' படத்தில் நடித்து பிரபலமடைந்தார்.

காதலர்களான நடிகை கியாரா அத்வானியும் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர். ராஜஸ்தானின் சூர்யகிரக் மண்டபத்தில் நடைபெற்ற கியாரா அத்வானி-சித்தார்த் மல்ஹோத்ரா திருமணத்தில் குடும்ப உறுப்பினர்களும், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

இந்த நிலையில், கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ரா தம்பதியினருக்கு 'ஆர்.சி 15' படக்குழு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. கியாரா அத்வானி, சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவாகி வரும் 'ஆர்.சி.15' படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story