சர்வதேச திரைப்பட விழாவில் நிவின் பாலியின் 'ஏழு கடல் ஏழு மலை'


சர்வதேச திரைப்பட விழாவில் நிவின் பாலியின் ஏழு கடல் ஏழு மலை
x

நடிகர் நிவின் பாலி 'ஏழு கடல் ஏழு மலை' படத்தில் நடித்துள்ளார்.

சென்னை,

'தங்க மீன்கள்', 'பேரன்பு' உள்ளிட்ட படங்களை இயக்கி புகழ்பெற்றவர் இயக்குனர் ராம். இவர் 'பிரேமம்' படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகர் நிவின் பாலியை வைத்து 'ஏழு கடல் ஏழு மலை' எனும் படத்தை இயக்கியுள்ளார்.

'மாநாடு' படத்தின் மிகப் பெரிய வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார்.

கதாநாயகியாக அஞ்சலி நடிக்கும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், 46-வது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழா வரும் 19-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் 'ஏழு கடல் ஏழு மலை' படம் திரையிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் இந்த ஆண்டு திரையிடப்படும் முதல் தமிழ் படம் இதுவாகும்.

முன்னதாக ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் "லைம்லைட்" பிரிவில் திரையிட 'விடுதலை' , மற்றும் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படங்கள் தேர்வாகின என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story