சமீபத்தில் மருத்துவமனை சென்று வந்த ராஷ்மிகா மந்தனா...!


சமீபத்தில் மருத்துவமனை சென்று வந்த ராஷ்மிகா மந்தனா...!
x

நடிகை ராஷ்மிகா மந்தனா தனியார் மருத்துவமனைக்கு சென்று பிரபல மருத்துவர் குரவ ரெட்டியை சந்தித்துள்ளார்.

சென்னை

நடிகை ராஷ்மிகா மந்தனா 2016 ஆம் ஆண்டு கன்னட திரையுலகில் கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தெலுங்கில்"சலோ" படத்தின் மூலம் 2018 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தார். பின்னர் அதே ஆண்டு வெளியான "கீதா கோவிந்தம்" திரைப்படம் அவரை இந்திய அளவில் புகழ் பெற வைத்தது.

2020 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு உடன் ஜோடி சேர்ந்த சரிலேரு நீகேவரு படத்தின் மூலம் முன்னணி கதாநாயகியானார்.

தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான "சுல்தான்" படத்தின் மூலம் அறிமுகமானார். கடந்தாண்டு அல்லு அர்ஜூனுடன் "புஷ்பா" படத்தில் நடித்து இந்திய முழுக்க முன்னணி நடிகையாக தற்போது வலம் வருகிறார்.

சமீபத்தில் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் 3.36 கோடி பின் தொடருபவர்களை கொண்ட முதல் தென்னிந்திய நடிகை என்ற சாதனையை படைத்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.

மேலும் தற்போது ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் படத்திலும், விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்திலும் நடித்து வருகிறார்.

ராஷ்மிகா மந்தனா-அமிதாப் பச்சன் நடிக்கும் 'குட்பாய்' படம் வரும் அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா பிரபல தனியார் மருத்துவமனைக்கு சென்று பிரபல மருத்துவர் குரவ ரெட்டியை சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை குரவ ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், "சாமி..சாமி.. என்று முழங்காலில் முழு எடையுடன் ஆடுவதால் தான் மூட்டு வலி வந்துள்ளது!" என என்னிடம் வந்த 'ஸ்ரீவல்லி'யிடம் இதை நான் நகைச்சுவையாக சொன்னேன்.

புஷ்பா படம் தொடங்கியதும் நான் ராஷ்மிகாவை வாழ்த்த விரும்பினேன். அந்த சந்தர்ப்பம் அவரின் முழங்கால் வலியால் வந்தது! அல்லு அர்ஜூனுக்கு விரைவில் தோள்பட்டை வலி வரும்.." என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.




Next Story