இலியானா நடிக்க தடை நீங்கியது?


இலியானா நடிக்க தடை நீங்கியது?
x

இலியானா சினிமாவில் நடிக்க தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கம் தடைவிதித்து இருந்ததாகவும், இதனாலேயே அவர் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கவில்லை என்றும் தெலுங்கு இணைய தளங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

தமிழில் 'கேடி' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இலியானா 'நண்பன்' படத்தில் விஜய் ஜோடியாக நடித்து பிரபலமானார். அதன் பிறகு தமிழ் படங்களில் நடிக்கவில்லை. தெலுங்கு படங்களில் இருந்தும் ஒதுங்கினார். இந்தி படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.

இந்த நிலையில் இலியானா சினிமாவில் நடிக்க தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கம் தடைவிதித்து இருந்ததாகவும், இதனாலேயே அவர் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கவில்லை என்றும் தெலுங்கு இணைய தளங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. ஒரு தமிழ் படத்தில் நடிக்க இலியானா முன்பணம் வாங்கிக்கொண்டு பிறகு அந்த படத்தில் நடிக்கவில்லை என்றும், பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதேபோல் தெலுங்கு தயாரிப்பாளருடனும் இலியானாவுக்கு தகராறு ஏற்பட்டு உள்ளது.தமிழ், தெலுங்கு தயாரிப்பாளர்கள் அளித்த புகார் காரணமாகவே இலியானா படங்களில் நடிக்க தென்னிந்திய தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தற்போது இலியானா இந்த பிரச்சினையை சுமுகமாக பேசி தீர்த்து விட்டார் என்றும், இனிமேல் தமிழ், தெலுங்கு படங்களில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.


Next Story