காந்தாரா 2-ம் பாகம் கதை தயாரானது


காந்தாரா 2-ம் பாகம் கதை தயாரானது
x

காந்தாரா 2-ம் பாகத்துக்கான திரைக்கதை முழுமையாக எழுதி முடித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த வருடம் வந்த சிறிய பட்ஜெட் படங்களில் அதிக வசூல் குவித்து இந்தியா முழுவதும் திரையுலகினரை திரும்பி பார்க்க வைத்த படம் காந்தாரா. இந்த படம் ரூ.16 கோடி செலவில் தயாராகி ரூ.400 கோடி வசூலித்தது. இதில் ரிஷப் ஷெட்டி கதாநாயகனாக நடித்து டைரக்டு செய்து இருந்தார்.

கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து தயாராகி இருந்தது. கன்னடத்தில் வெற்றி பெற்றதால் காந்தாரா படத்தை தமிழ், இந்தி உள்பட அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்றும் படக்குழுவினர் அறிவித்து இருந்தனர்.

காந்தாரா 2-ம் பாகத்துக்கான திரைக்கதையை உருவாக்கும் பணி நடந்து வந்தது. தற்போது திரைக்கதையை முழுமையாக எழுதி முடித்து இருப்பதாகவும், படப்பிடிப்பை விரைவில் தொடங்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. காந்தாரா முதல் பாகத்தின் முந்தைய காலத்து கதையம்சம் கொண்ட படமாக இரண்டாம் பாகம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

1 More update

Next Story