நீலகிரி ஹெத்தையம்மன் கோவில் திருவிழாவுக்கு பாரம்பரிய உடையில் வந்த சாய் பல்லவி
நீலகிரி ஹெத்தையம்மன் கோவில் திருவிழாவுக்கு நடிகை சாய் பல்லவி பாரம்பரிய உடையில் வந்தார்.
நீலகிரி,
மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'பிரேமம்' திரைப்படம் மூலம் 'மலர் டீச்சர்' என்ற கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. அதன்பின்னர் விஜய் இயக்கத்தில் வெளியான 'தியா' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'கார்கி' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
நடிகை சாய் பல்லவி தற்போது தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், நடிகை சாய் பல்லவி கோத்தகிரியில் அமைந்துள்ள படுகர் இனத்தின் ஹெத்தையம்மன் கோவில் திருவிழாவில் பாரம்பரிய உடையணிந்து பங்கேற்றுள்ளார். அங்கு, குடும்பத்தினருடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Related Tags :
Next Story