சல்மான் கானின் 'டைகர் 3' ரூ.400 கோடி வசூல்


சல்மான் கானின் டைகர் 3 ரூ.400 கோடி வசூல்
x

யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் படங்களில் ஒன்றாக வெளியாகியுள்ள இப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 12-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

கபீர் கான் இயக்கத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடிப்பில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஏக் தா டைகர்'. இப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து 2017-ஆம் ஆண்டு அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கத்தில் 'டைகர் ஜிந்தா ஹே' திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இதன் மூன்றாம் பாகமாக தற்போது 'டைகர் 3' உருவாகியுள்ளது. சல்மான் கான், கேத்ரினா கைஃப் நடித்துள்ள இந்தி படம் 'டைகர் 3'. பான் இந்தியா முறையில் தமிழிலும் வெளியாகியுள்ள இந்தப் படத்தை யஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. ஸ்பை திரில்லராக உருவாகியுள்ள இதை மனீஷ் சர்மா இயக்கியுள்ளார்.

யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் படங்களில் ஒன்றாக வெளியாகியுள்ள இப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 12-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்நிலையில், வெளியாகி 10 நாட்கள் ஆன நிலையில் உலகம் முழுவதும் ரூ.400.50 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ.298 கோடியையும், மற்ற நாடுகளில் ரூ.102 கோடியையும் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story
  • chat