சல்மான் கான் "பெண்களை கொடூரமாக அடிப்பவர், ஒரு மன நோயாளி" -முன்னாள் காதலி பரபரப்பு குற்றச்சாட்டு
முன்னாள் காதலியும் நடிகையுமான சோமி அலி சல்மான் கானை வெறி பிடித்த மிருகம், பெண்களை கொடூரமாக அடிப்பவர் என கூறி பரபரப்பை கிளப்பி உள்ளார்.
மும்பை
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான். 56 வயதாகியும் நடிகர் சல்மான் கான் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளுடன் கிசுகிசுக்கபட்டார் சல்மான் கான்.
1986ல் சங்கீதா பிஜிலினியை காதலித்து வந்ததாக கூறபட்டது.1993ம் ஆண்டு இவர்கள் சந்தித்து கொண்டனர். சோமிக்கு அப்போது 19 வயது தான். சல்மானின் குடிப்பழக்கம் பிடிக்காமல், இவர் பிரிந்து சென்றார். காதலிகள் பட்டியலில் ஜரின் கான்,கத்ரீனா,சினேகா உல்லல்,டைசி ஷா,லூலியா வந்தூர் ஆகியோருடனும் காதல் உள்ளதாக கிசுகிசுக்கபட்டார். இதுவரை இவருடன் நடித்த எட்டு நடிகைகளுடன் இணைத்து சல்மான் கிசுகிசுக்கப்பட்டுள்ளார்.
அதிக அளவு கிசுகிசுக்கப்பட்ட பாகிஸ்தான் நாயகி தான் சோமி அலி. 1993 லிருந்த நட்பு, சல்மான் கானும் சோமி அலியும் மும்பையில் சுற்றாத ஏரியா கிடையாது, பின்னர் 1999ல் சல்மான் கானின் கோபமும், ஒரு சில நடவடிக்கைகளும் பிடிக்காமல் பிரிந்து பாகிஸ்தானுக்கே பறந்தார்.
தற்போது முன்னாள் காதலியும் நடிகையுமான சோமி அலி சல்மான் கானை வெறி பிடித்த மிருகம், பெண்களை கொடூரமாக அடிப்பவர் என கூறி பரபரப்பை கிளப்பி உள்ளார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சல்மான் கான். மான் வேட்டை முதல் ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி சிறைக்கு சென்று திரும்பிய போதும், சல்மான் கான் ரசிகர்களை அவரை ஒரு போதும் விட்டுக் கொடுக்காமல் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர்.
இந்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை 15 சீசன்களாக நடத்தி உள்ளார். அடுத்த சீசனுக்கு 500 கோடி மேல் சம்பளம் கேட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
சல்மான் கானை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வழிபட்டு வருவதை பார்த்து கடுப்பான பாலிவுட் நடிகை சோமி அலி, அவர் ஒரு வெறிபுடிச்ச மிருகம், பெண்களை கொடூரமாக தாக்குபவர் என சல்மான் கான் பெயரை குறிப்பிடாமல் அவர் நடித்த படத்தை குறிப்பிட்டு போட்டுள்ள போஸ்ட் பரபரப்பை கிளப்பி உள்ளது.
இதற்கு முன் பாலிவுட்டின் ஹார்வே வெயின்ஸ்டீன் சல்மான் கான் என அவர் போட்ட போஸ்ட் பெரும் சர்ச்சையை கிளப்பியது. பாலிவுட்டில் தன்னை போல பல பெண்கள் அவரிடம் ஏமாந்து போயுள்ளோம் என்றும், சீக்கிரமே அனைவரும் வெளியே வந்து புகார் அளித்து உன்னையும் தூக்கி உள்ளே வைப்பாங்க என்று பேசியிருந்தார்.
ஹாலிவுட்டில் பல நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தயாரிப்பாளர் ஹார்வே வெயின்ஸ்டீன் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.