பேயாக நடிக்கும் சமந்தா


பேயாக நடிக்கும் சமந்தா
x

ராஜஸ்தான் பின்னணியில் சரித்திர கதையம்சம் கொண்ட படத்தில் நடிகை சமந்தா ராணியாகவும், பேயாகவும் இரு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பேய் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. திகில் படங்களை குறைந்த செலவில் எடுத்து அதிக லாபம் பார்க்கிறார்கள். முன்னணி கதாநாயகர்களை வைத்து பிரமாண்ட செலவில் எடுத்த பல படங்கள் சமீபத்தில் தோல்வி அடைந்ததால் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் பார்வை பேய் கதைகள் பக்கம் திரும்பி உள்ளது. நடிகர், நடிகைகளும் திகில் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். நடிகை சமந்தாவும் ஒரு திகில் கதையில் நடிக்கிறார். இந்த படம் ராஜஸ்தான் பின்னணியில் சரித்திர கதையம்சம் கொண்ட படமாக தயாராகிறது. இதில் சமந்தா ராணியாகவும், பேயாகவும் இரு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆயுஷ்மன் குரானாவும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். அமர்கவுசிக் டைரக்டு செய்கிறார். இந்தியில் தயாராகும் இந்த படத்தை தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டு உள்ளனர். அதிரடி சண்டைகளுடன் தயாராகும் வெப் தொடரிலும் சமந்தா நடிக்க உள்ளார். இதற்காக சண்டை பயிற்சி எடுத்து வருகிறார்.


Next Story