பாலிவுட்டில் ஆதித்யா ராய் கபூருக்கு ஜோடியாகும் சமந்தா


பாலிவுட்டில் ஆதித்யா ராய் கபூருக்கு ஜோடியாகும் சமந்தா
x

நடிகை சமந்தா, பாலிவுட்டில் ஆதித்யா ராய் கபூருடன் இணைந்து ரக்தபீஜ் என்ற வெப் தொடரில் நடிக்க இருக்கிறார்.

இந்திய சினிமாவில் டாப் நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. அவர் அறிமுகமாகி நடித்தது தமிழாக இருந்தாலும், இன்று அவர் கோலிவுட் நடிகையாக மட்டுமன்றி இந்திய அளவில் ஹிட் நடிகையாக உருவெடுத்துள்ளார். தென்னிந்தியா மட்டுமன்றி வட இந்தியாவிலும் அவருக்கு பல கோடி ரசிகர்கள் உள்ளனர். மாஸ்கோவின் காவிரி என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகினார். இதைத் தொடர்ந்து சமந்தாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. தமிழில் ஒரு முன்னணி நடிகையாக உயரத் தொடங்கினார்.



தமிழில் டாப் நடிகையாக உருவெடுத்த சமந்தா அதேசமயம், தெலுங்கிலும் பல படங்களில் நடித்தார். இதையடுத்து பாலிவுட் பக்கம் அவருக்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கின. பேமிலி மேன் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே சருமப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள அவர், தொடர்ந்து வெளிநாடுகளுக்கு சென்று பல சிகிச்சைகள் பெற்று வருகிறார்.


இந்நிலையில், நடிகை சமந்தா, பாலிவுட்டில் ஆதித்யா ராய் கபூருடன் இணைந்து ரக்தபீஜ் என்ற வெப் தொடரில் நடிக்க இருக்கிறார். ராஜ் டி கே ஆகியோர் இந்த தொடரை இயக்குகின்றனர். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்பாக நீதானே என் பொன்வசந்தம் படத்தின் இந்தி ரீமேக்கில் சமந்தாவும், ஆதித்யா ராய் கபூரும் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story