இன்ஸ்டாகிராமில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகை சமந்தா


இன்ஸ்டாகிராமில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகை சமந்தா
x

இன்ஸ்டாகிராமில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகையாக சமந்தா முதலிடத்தில் இருக்கிறார்.

தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருக்கிறார்கள். குறிப்பாக 'இன்ஸ்டாகிராம்' எனும் சமூக வலைதளத்தை பயன்படுத்துவதில் கவனம் செலுத்துகிறார்கள்.

அதேவேளை விஜய், அஜித், நயன்தாரா போன்ற பிரபலங்கள் 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தை பயன்படுத்துவது கிடையாது. ரஜினிகாந்த் போன்ற நடிகர்கள் இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்திருந்தாலும் அதில் பதிவு போடுவது கிடையாது.அதனால் இன்ஸ்டாகிராமில் நடிகர்களை விட நடிகைகள் தான் அதிகம் ரசிகர்களை கொண்டிருக்கின்றனர்.

அந்தவகையில் இன்ஸ்டாகிராமில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகையாக சமந்தா முதலிடத்தில் இருக்கிறார். அவரை 2 கோடியே 37 லட்சம் ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள். இதற்கு அடுத்தபடியாக காஜல் அகர்வால் (2 கோடியே 27 லட்சம் ரசிகர்கள்), சுருதிஹாசன் (1 கோடியே 99 லட்சம் ரசிகர்கள்), தமன்னா (1 கோடியே 66 லட்சம் ரசிகர்கள்), கீர்த்தி சுரேஷ் (1 கோடியே 30 லட்சம் ரசிகர்கள்) ஆகியோர் பட்டியலில் இடம்பிடித்து இருக்கிறார்கள். இதற்கு அடுத்தபடியாக சாய் பல்லவி, ஹன்சிகா, அனுஷ்கா, அமலாபால் ஆகியோரும் இருக்கிறார்கள்.


Next Story