மகளின் பழைய படத்தைப் பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சஞ்சய் தத்


மகளின் பழைய படத்தைப் பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சஞ்சய் தத்
x

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தனது மகளின் பிறந்தநாள் வாழ்த்து செய்தியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

மும்பை,

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத். இவர், தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விஜய்யின் லியோ படத்தில் வில்லனாக நடித்து பாராட்டுகளை பெற்றவர். இவர் தற்போது 'ஹவுஸ்புல் 5' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தனது மகளின் பிறந்தநாள் வாழ்த்து செய்தியை மகளுடன் இருக்கும் பழைய படத்துடன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "என் இளவரசி, உங்கள் பிறந்தநாளில், நான் உங்கள் தந்தையாக இருப்பதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் அன்பு என் உலகத்தை ஒளிரச் செய்கிறது. எனது பிறந்தநாள் வாழ்த்துகளை வெளிப்படுத்த முடியாது . உங்களை நினைத்து எப்போதும் நான் பெருமைப்படுகிறேன்." என்று கூறியுள்ளார்.

நடிகர் சஞ்சய் தத் மற்றும் ரவீனா டாண்டான் நடித்துள்ள 'குட்சாடி' படம் ஜியோ சினிமா பிரீமியம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது. டபுள் இஸ்மார்ட், ஷேரா டி காம் பஞ்சாபி மற்றும் கேடி தி டெவில் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

அஜய் தேவ்கன், சஞ்சய் தத் நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான படம் 'சன் ஆப் சர்தார்'. தற்போது இப்படத்தின் 2-வது பாகமான 'சன் ஆப் சர்தார் 2' உருவாகி வருகிறது. விசா பிரச்சனை காரணமாக அஜய் தேவ்கனின் 'சன் ஆப் சர்தார் 2' படத்தில் இருந்து தத் விலக்கப்பட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாயின. இந்த படத்தின் படப்பிடிப்பு இங்கிலாந்தில் நடைபெற்றது. ஆனால் நடிகர் சஞ்சய் தத்திற்கு இங்கிலாந்து செல்வதற்கான விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த 1993-ம் ஆண்டு சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த காரணத்திற்காக அவர் படப்பிடிப்பிற்காக இங்கிலாந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

இங்கிலாந்து அரசு நியாயமற்ற முறையில் நடந்து கொண்டதாகவும், ஆரம்பத்தில் வழங்கப்பட்ட விசா பின்னர் ஏன் ரத்து செய்யப்பட்டது என்று கேள்வி எழுகிறது என்றும் நடிகர் சஞ்சய் தத் கூறியுள்ளார்.

'சன் ஆப் சர்தார்' படத்தில் தத்துக்குப் பதிலாக ரவி கிஷன் நடித்திருப்பதாகவும், இப்போது அவர் ஒரு கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

1 More update

Next Story