சந்தானம் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது
'குலு குலு' இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது
சென்னை,
நடிகர் சந்தானம் தற்போது 'மேயாத மான்', 'ஆடை' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு 'குலு குலு' என்று பெயரிடப்பட்டுள்ளது. சந்தானத்திற்கு ஜோடியாக அதுல்யா சந்திரா மற்றும் நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
மேலும் பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, 'லொள்ளு சபா' மாறன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ராஜ் நாராயணன் தயாரித்துள்ளளார்.
இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் ஜூலை 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
#GuluGulu from July 29th , get ready for a fun and frolic entertainer. Something new in my career, see you all in theaters #GuluGulufromJuly29
— Santhanam (@iamsanthanam) July 8, 2022
@circleboxE @Music_Santhosh @KVijayKartik @rajnarayanan_ @SonyMusicSouth @Kirubakaran_AKR @proyuvraaj pic.twitter.com/PXvb5RySEF