'நான் எங்கு சென்றாலும் என்னை சிலர்...' - கடுப்பான சாரா அலிகான்


நான் எங்கு சென்றாலும் என்னை சிலர்... - கடுப்பான சாரா அலிகான்
x

image courtecy:instagram@saraalikhan95

நடிகர் தனுஷ் நடித்த அத்ரங்கி ரே என்ற படத்தில் நாயகியாக சாரா அலிகான் நடித்து இருக்கிறார்.

சென்னை,

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் சாரா அலிகான். பிரபல பாலிவுட் நடிகரான மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் வெளியான கேதார்நாத் படத்தில் நடித்து பாலிவுட்டில் இளம் நடிகையாக அறிமுகமானவர். தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

நடிகர் தனுஷ் நடித்த அத்ரங்கி ரே என்ற படத்திலும் நாயகியாக நடித்து இருக்கிறார். இந்நிலையில், புகைப்பட கலைஞர்களை சாரா அலிகான் கடுமையாக சாடியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, 'பாப்பரசி' என்ற பெயரில் பிரபலங்கள் எங்கு சென்றாலும் புகைப்பட கலைஞர்கள் பின்தொடருகிறார்கள். எனது முதல் படம் ரிலீசானபோது, நான் எங்கு சென்றாலும் என்னை சிலர் பின்தொடர்ந்து புகைப்படம் எடுப்பார்கள்.

எனது பிரைவசி கேள்விக்குறியாவதால், நானும் அவர்களிடம் கடுமையாக நடந்துகொண்டிருக்கிறேன். நாளடைவில் இது தொடர்கதையாகிவிட்டதால் எனது வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டேன். ஆனாலும் இந்த போக்கை ஏற்கமுடியாது. நான் சொல்வது தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டாலும், உண்மையை சொல்வதால் எனக்கு தயக்கம் இல்லை. இன்னும் சொல்லப்போனால் பலரது குரலாகவும் எனது கருத்து நிச்சயம் இருக்கும்' என்று கூறியுள்ளார்.

1 More update

Next Story