பள்ளி மாணவர்கள் வாழ்க்கை கதை


பள்ளி மாணவர்கள் வாழ்க்கை கதை
x

வாலி மோகன்தாஸ் பள்ளி மாணவர்கள் வாழ்க்கை கதையை மையமாக கொண்டு ‘ரங்கோலி' என்ற புதிய படத்தை இயக்கி உள்ளார்.

வாலி மோகன்தாஸ் இயக்கி உள்ள புதிய படம் 'ரங்கோலி'. இதில் மாநகரம், தெய்வத்திருமகள் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள ஹமரேஷ் நாயகனாக அறிமுகமாகிறார். பிரார்த்தனா, சாய் ஶ்ரீ, அக்‌ஷயா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆடுகளம் முருகதாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.

படம் குறித்து வாலி மோகன்தாஸ் கூறும்போது, ``பள்ளி வாழ்க்கையை சொல்லும் திரைப்படமாக தயாராகி உள்ளது. அரசு பள்ளியில் பயிலும் மாணவனை அவனது தந்தை வற்புறுத்தி தனியார் பள்ளியில் சேர்க்கிறார். ஏற்றத்தாழ்வு போன்ற பல பிரச்சினைகளால் அங்குள்ள மாணவர்களோடு அவன் ஒன்றி பழகுவதில் சிக்கல்கள் வருகின்றன. இறுதியில் ஒரு பிரச்சினையும் வருகிறது. அந்த பள்ளியில் படிப்பை தொடர்ந்தானா? வேறு முடிவு எடுத்தானா? என்பது கதை'. பள்ளி மாணவர்களின் குதூகலமான வாழ்க்கையோடு உணர்வுப்பூர்வமான கதையம்சத்தில் இந்த படம் தயாராகி உள்ளது'' என்றார். கோபுரம் ஸ்டூடியோ சார்பில் கே.பாபு ரெட்டி மற்றும் ஜி.சதீஷ்குமார் தயாரித்து உள்ளனர். இசை: கே.எஸ்.சுந்தரமூர்த்தி, ஒளிப்பதிவு; மருதநாயகம்.


Next Story