அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு..!


அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு..!
x

நடிகர் அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.

சென்னை,

நடிகர் அர்ஜூன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் இணைந்து 'தீயவர் குலைகள் நடுங்க' என்ற படத்தில் நடித்து வருகின்றனர். திரில்லர் வகையில் உருவாகியுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் தினேஷ் லட்சுமணன் இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்தில் அர்ஜூன் துப்பறியும் அலுவராக நடித்துள்ளார். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பள்ளியின் ஆசிரியையாக நடித்துள்ளார். ஜி.எஸ்.ஆர்ட்ஸ் சார்பில் ஜி.அருள் குமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்துள்ளார். பரத் ஆசீவகன் இசையமைத்துள்ளார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்கிறார்.

கடந்த மார்ச் மாதத்தில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் விஷால் இருவரும் தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டனர். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


1 More update

Next Story