5 மொழிகளில் சமந்தா படம்


5 மொழிகளில் சமந்தா படம்
x

தெலுங்கில் தயாராகி உள்ள இந்த சாகுந்தலம் படத்தையும் 5 மொழிகளில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தாவுக்கு பேமிலிமேன் 2 வெப் தொடரில் நடித்த பிறகு வட இந்தியாவிலும் ரசிகர்கள் சேர்ந்துள்ளனர். இந்தி படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்துள்ளன. தற்போது யசோதா படத்தில் நடித்து முடித்துள்ளார். தெலுங்கில் தயாராகி உள்ள இந்த படத்தை தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளிலும் வெளியிடுகிறார்கள். அதிரடி திகில் கதையம்சம் கொண்ட படமாக எடுத்துள்ளனர்.

இதில் சமந்தா கர்ப்பிணி பெண்ணாக நடித்து இருக்கிறார். இதன் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அதில் கர்ப்பிணியாக வருகிறார். கர்ப்பிணி என்பதால் ஜாக்கிரதையாக இருக்கும்படி டாக்டர் அறிவுறுத்த இன்னொரு புறம் அவர் ஆபத்துக்களை சந்திப்பது போன்ற காட்சிகள் டிரெய்லரில் உள்ளன. சமந்தாவை நாய்கள் துரத்த பயந்து ஓடுவது போன்றும் கர்ப்பிணி என்றும் பார்க்காமல் சிலர் அடிப்பதுபோலவும் காட்சிகள் உள்ளன. இதனால் படத்துக்கு எதிர்பார்ப்பு உள்ளது. சாகுந்தலம் என்ற புராண படத்திலும் நடித்து முடித்துள்ளார். தெலுங்கில் தயாராகி உள்ள இந்த சாகுந்தலம் படத்தையும் 5 மொழிகளில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.


Next Story