நான் 23 முறைக்கு மேல் காதலித்துள்ளேன் - நடிகை ஷெனாஸ் டிரசரி
ஷெனாஸ் டிரசரிவாலா பயணத்தின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக உலகின் பல்வேறு நகரங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார்.
மும்பை,
மும்பை சேர்ந்த நடிகை ஷெனாஸ் டிரசரிவாலா கடந்த 2001 ஆம் ஆண்டு வெளிவந்த எடுருலேனி மனிஷி என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து 2003-ம் ஆண்டு இஷ்க் விஷ்க் படத்தின் மூலம் பாலிவுட்டில் நடித்தார். மேலும், இவர் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், டிராவல் விலாகராகவும் உள்ளார்.
ஷெனாஸ் டிரசரிவாலா பயணத்தின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக உலகின் பல்வேறு நகரங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பான வீடியோக்களையும், படங்களையும் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
உலகின் பல்வேறு நகரங்களில் உள்ள பிரபலமான இடங்கள் மற்றும் உணவுகளை பற்றி தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில், கடந்த வாரம், ஷெனாஸ் டிரசரிவாலா தனது இன்ஸ்ட்ராகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் காதல் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
நீங்கள் எத்தனை முறை காதலித்துள்ளீர்கள்? என்னைப்போல் சிவப்பு நிற ஆடையை அணிந்ததுண்டா? என்ற தலைப்பில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், நான் மீண்டும் காதலிக்க முடியாது என்று நினைக்கிறேன். நான் 23 முறைக்கு மேல் காதலித்துள்ளேன். கிடைக்காத நபருக்காக மீண்டும் காதலில் விழ முடியாது என்று ரசிகர் தெரிவித்த கருத்துக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். எனவே கவலைப்படாதீர்கள் நீங்கள் 23 முறைக்கு மேல் காதலிப்பீர்கள். நான் 27 முறை என நகைச்சுவையாக கூறினார்.