காஷ்மீரில் 'லியோ' படப்பிடிப்பு; புகைப்படத்தை பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்..


காஷ்மீரில் லியோ படப்பிடிப்பு; புகைப்படத்தை பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்..
x

புகைப்படத்தில் நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ், கவுதம் வாசுதேவ்மேனன் மற்றும் பலர் உள்ளனர்

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படத்திற்கு 'லியோ' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 'மாஸ்டர்' திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி லோகேஷ் கனகராஜ் இதற்கு முன்பு இயக்கிய 'கைதி', 'விக்ரம்' ஆகிய திரைப்படங்களின் கதைகள் ஒரே களத்தில் இணைவது போல் உருவாக்கப்பட்டிருந்தது. இதற்கு எல்.சி.யூ. என ரசிகர்கள் பெயரிட்டு அழைத்து வரும் நிலையில், விஜய் நடிக்கும் 'லியோ' படமும் இந்த யூனிவர்சில் இணையுமா என்பதே ரசிகர்களின் மிகப்பெரிய கேள்வியாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் 'லியோ' படத்தின் டைட்டில் புரோமோ காட்சி அண்மையில் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், அந்த புரோமோவில் இடம்பெற்ற பாடல் பலரையும் கவர்ந்தது. அனிருத் இசையில் ஆங்கில வரிகளைக் கொண்ட அந்த பாடலுக்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது

இப்படத்தின் படப்பிடிப்பிற்காக சமீபத்தில் 'லியோ' படக்குழு காஷ்மீருக்கு சென்றது. இந்நிலையில், காஷ்மீரில் படக்குழுவினருடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தில் நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ், கவுதம் வாசுதேவ்மேனன் மற்றும் பலர் உள்ளனர். இந்த புகைப்படத்திற்கு மரண வெயிட்டிங் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Related Tags :
Next Story