மீண்டும் காதலரை பிரிந்தாரா சுருதிஹாசன்?


மீண்டும் காதலரை பிரிந்தாரா சுருதிஹாசன்?
x

நடிகை சுருதிஹாசன், தனது காதலர் சாந்தனுவை சமூகவலைதளப் பக்கத்தில் பின்தொடர்வதை நிறுத்தியுள்ளார்.மேலும் அவருடனான புகைப்படங்களையும் நீக்கியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

நடிகை சுருதிஹாசன், சாந்தனு என்ற டாட்டூ ஆர்டிஸ்ட்டை காதலித்து வந்தார். இருவரும் மும்பையில் ஒரே வீட்டில் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தனர். அவ்வப்போது, சாந்தனுவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்து வந்தார் சுருதிஹாசன். 'திருமணம் எப்போது?' என்ற கேள்வி எழும்போதெல்லாம் பதில் சொல்லாமல் தவிர்த்து வந்தார் சுருதிஹாசன்..

தற்போது நடிகை ஸ்ருதிஹாசன், தனது காதலர் சாந்தனுவை சமூகவலைதளப் பக்கத்தில் பின்தொடர்வதை நிறுத்தியுள்ளார். மேலும், சாந்தனுவுடன் இருக்கும் தனது பிறந்தநாள் கொண்டாட்டம், தமிழ் புத்தாண்டு என பகிர்ந்த அனைத்துப் புகைப்படங்களையும் தனது பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார். இதனால், இருவருக்குள்ளும் பிரேக்கப்பா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சாந்தனுவும் சுருதிஹாசனை சமூகவலைதளப் பக்கத்தில் பின்தொடர்வதை நிறுத்தியுள்ளார். 'சிலரின் உண்மை முகங்கள் இப்போதுதான் தெரிய வந்துள்ளது' எனப் புதிரான ஒரு பதிவையும் பகிர்ந்துள்ளார் சுருதி. சாந்தனுவுக்கு முன்பு லண்டனைச் சேர்ந்த மைக்கேல் என்பவரை சுருதிஹாசன் டேட் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த உறவில் இருந்து பிரிந்த பின்னரே அவர் சாந்தனுவுடன் லிவ்வினில் இருந்தார். இப்போது கடந்த ஒரு மாதமாகவே சாந்தனு- சுருதி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகத் தெரிகிறது. இதை கவனித்த ரசிகர்கள் ''இனிமேல்' வீடியோ பாடலில் லோகேஷ் கனகராஜூடன் நெருக்கம் காட்டியது இதனால் தானா?" என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

1 More update

Next Story