'எஸ்கே 23 ': சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக களமிறங்கும் பாலிவுட் நடிகர்


எஸ்கே 23 :  சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக களமிறங்கும் பாலிவுட் நடிகர்
x

நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்கே 23 படத்தில் வில்லனாக வித்யுத் ஜம்வால் நடித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான 'அயலான்' திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தை 'ரங்கூன்' திரைப்பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இந்த படத்திற்கு அமரன் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் கதாநாயகியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ளன.

தற்போது, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். இந்த நிலையில், இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால் நடித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் நடிகர் விஜய்யை வைத்து இயக்கிய துப்பாக்கி படத்தில் வித்யுத் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். அஞ்சான் படத்திலும் கவனிக்கப்பட்டார். அவர், மீண்டும் தமிழ்ப் படத்தில் நடிக்க உள்ளது எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது.

எஸ்.கே. 23 படத்தை இந்தாண்டு தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.


Next Story