'மங்கி மேன்' என்ற ஹாலிவுட் படத்தில் சோபிதா துலிபாலா


மங்கி மேன் என்ற ஹாலிவுட் படத்தில் சோபிதா துலிபாலா
x
தினத்தந்தி 28 Jan 2024 7:45 PM GMT (Updated: 28 Jan 2024 7:46 PM GMT)

ஹனுமானின் புராண கதையை நவீன காலத்துடன் இணைத்து அதிரடி கதைக்களத்தில் இந்த படம் உருவாகவுள்ளது.

சென்னை,

தமிழில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து பிரபலமானவர் சோபிதா துலிபாலா. தற்போது தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

இந்த நிலையில் 'மங்கி மேன்' என்ற ஹாலிவுட் படத்தில் சோபிதா துலிபாலா நடிக்கவுள்ளார். இதில் ஸ்லம்டாக் மில்லினர், லயன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமான தேவ்படேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஹனுமானின் புராண கதையை நவீன காலத்துடன் இணைத்து அதிரடி கதைக்களத்தில் இந்த படம் உருவாகவுள்ளது. இதில் சிக்கந்தர் கெர் வில்லனாக வருகிறார். படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

ஏற்கனவே பல இந்திய நடிகைகள் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளனர். இந்த பட்டியலில் தற்போது சோபிதா துலிபாலாவும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹாலிவுட் படத்தில் நடிக்கும் சோபிதா துலிபாலாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். மங்கிமேன் படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாவது மகிழ்ச்சியாக உள்ளது என்று சோபிதா துலிபாலா தெரிவித்து உள்ளார்.


Next Story