செல்பி எடுக்க மறுப்பு : பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல பாடகரை தாக்கிய எம்.எல்.ஏ மகன்


செல்பி எடுக்க மறுப்பு : பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல பாடகரை தாக்கிய எம்.எல்.ஏ மகன்
x

சோனு நிகாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.தற்போது சோனு நன்றாக இருக்கிறார்,

மும்பை

பிரபல பாடகர் சோனு நிகாம். பத்மஸ்ரீ விருது பெற்றவர். இவரது இசை நிகழ்ச்சி மும்பையின் மும்பையின் செம்பூரில் நடந்து கொண்டு இருந்தது.

அப்போது அங்கு வந்த சிவசேனா எம்.எல்.ஏ பிரகாஷ் பட்டர்பேகரின் மகன் மற்றும் மருமகன் ஆகியோர் சோனு நிகாமுடன் செல்பி எடுக்க விரும்பினர். அப்போது நேரலை நிகழ்ச்சி நடைபெற்று கொண்டு இருந்ததால் சோனு நிகாம் பாதுகாவலர்கள அவர்களை தடுத்தனர். இதனால் கோபம் அடைந்த எம்.எல்..ஏ. மகனின் உடன் வந்தவர்கள் பாதுகாவலர்களையும் பாடகர் சோனு நிகாமையும் கடுமையாக தாக்கினர்.

இதில் சோனு நிகாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.தற்போது சோனு நன்றாக இருக்கிறார், அவரது குரு, குலாம் முஸ்தபா கான், அவரது நெருங்கிய உதவியாளர், ரப்பானி கான் மற்றும் அவரது பாதுகாவலர் அனைவரும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story