பிறந்த நாளையொட்டி 'பதே' படத்தின் போஸ்டரை வெளியிட்ட சோனு சூட்


பிறந்த நாளையொட்டி பதே படத்தின் போஸ்டரை வெளியிட்ட சோனு சூட்
x

நடிகர் சோனு சூட், தனது 51-வது பிறந்தநாளான இன்று, 'பதே' புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மும்பை,

பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட். இவர் கொரோனா காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், ஏழை மக்களுக்கு நிதி உதவி, பஸ் வசதி உள்பட பல உதவிகளை வழங்கி, நாடு முழுவதும் பிரபலமடைந்தார். இவர் தமிழில் ஒஸ்தி, தேவி, அருந்ததி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது, இவர் அபிநந்தன் குப்தா இயக்கத்தில் 'பதே' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸும் நடித்துள்ளார். இப்படத்தை சக்தி சாகர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

நடிகர் சோனு சூட், தனது 51-வது பிறந்தநாளான இன்று, 'பதே' புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளார். மேலும் 'தேசத்தின் சிறந்த ஆக்சன் படத்திற்காக தயாராக இருங்கள்' என்று பதிவிட்டுள்ளார். அந்த வகையில், இப்படம் அடுத்த வருடம் ஜனவரி 10-ந் தேதி வெளியாக உள்ளது.

அவரை தொடர்ந்து நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸும் மற்றொரு போஸ்டரையும் பகிர்ந்துள்ளார். மேலும், அதில் நடிகர் சோனு சூட்டிற்கு பிறந்த நாள் வாழ்த்தும் தெரிவித்துள்ளார். இப்படம் சைபர் கிரைம் தொடர்பான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story