'பாகுபலி 2' சாதனையை முறியடித்த 'ஸ்ட்ரீ 2'


Stree 2 breaks Baahubali 2 record
x

'பாகுபலி 2' படத்தின் மாபெரும் சாதனை ஒன்றை ஸ்ட்ரீ 2 முறியடித்துள்ளது.

மும்பை,

ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் அமர் கவுஷிக் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான 'ஸ்ட்ரீ' படத்தின் வெற்றியைத்தொடர்ந்து, இப்படத்தின் 2-ம் பாகம் உருவானது.

அதன்படி, ஸ்ட்ரீ 2 கடந்த மாதம் 15-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இப்படத்தில் ராஜ்குமார் ராவ் , ஷ்ரத்தா கபூர் ஆகியோருடன் பங்கஜ் திரிபாதி, அபர்சக்தி குரானா மற்றும் அபிஷேக் பானர்ஜி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதுவரை உலகம் முழுவதும் ரூ.759 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் இந்தியாவில் இந்தியில் மட்டும் ரூ.516 கோடியாகும். இதன் மூலம் 'பாகுபலி 2' படத்தின் மாபெரும் சாதனை ஒன்றை ஸ்ட்ரீ 2 முறியடித்துள்ளது. அதன்படி, இந்தியில் பாகுபலி 2 படம் ரூ.510 கோடி வசூலித்திருந்தநிலையில், தற்போது இந்த சாதனை ஸ்ட்ரீ 2 முறியடித்துள்ளது.

அக்சய் குமாரின் 'கேல் கேல் மெய்ன்' மற்றும் ஜான் ஆபிரகாமின் 'வேடா' படங்களுடன் மோதி 'ஸ்ட்ரீ 2' படம் இந்த வசூல் சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story