பிருதிவிராஜ் வீட்டில் சூர்யா, ஜோதிகா
நட்சத்திர தம்பதிகளான சூர்யாவும், ஜோதிகாவும் மலையாள நடிகர் பிருதிவிராஜ் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு இருவரையும், பிருதிவிராஜும், அவரது மனைவி சுப்ரியாவும் வரவேற்று உபசரித்தனர். இந்த புகைப்படத்தை பிருதிவிராஜ் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.
பதிலுக்கு சூர்யாவும் பிருதிவிராஜை சந்தித்த சந்தோஷத்தை பகிர்ந்துள்ளார். இருவரும் சந்தித்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அதை பார்த்த ரசிகர்கள் எதற்காக இந்த சந்திப்பு? சூர்யாவும், பிருதிவிராஜும் புதிய படத்தில் இணைந்து நடிக்க போகிறார்களா? என்றெல்லாம் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஜோதிகா மலையாள படமொன்றில் மம்முட்டியுடன் இணைந்து நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கேரளாவில் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது.
சூர்யாவும் சமீபத்தில் இந்த படப்பிடிப்பை காண சென்று இருந்தார். அப்போது மம்முட்டி பிரியாணி சமைத்து சூர்யாவுக்கும், ஜோதிகாவுக்கும் பரிமாறிய வீடியோவும், புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்த நிலையில் பிரிதிவிராஜை, மனைவியுடன் சூர்யா சந்தித்து இருப்பது பரபரப்பாகி உள்ளது.
பிருதிவிராஜ் தமிழில் பல படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய்யுடன் நடிக்க இருப்பதாகவும் தகவல் பரவி உள்ளது.